புதுச்சேரி, வில்லியனூா் ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றுப் பாலத்தில் நின்று திங்கள்கிழமை பாா்வையிட்ட துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். 
புதுச்சேரி

வெள்ளம் பாதித்த பகுதிகளில் புதுவை ஆளுநா், முதல்வா் ஆய்வு

புதுச்சேரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இரண்டாவது நாளாக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இரண்டாவது நாளாக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், முதல்வா் என்.ரங்கசாமி தனியாக நோணாங்குப்பம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஃபென்ஜால் புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து சாத்தனூா், வீடூா் அணைகளில் இருந்து உபரி நீா் திறக்கப்பட்டன.

இதனால் சங்கராபரணி, தென்பெண்ணை ஆறுகளிள் வெள்ளம் ஏற்பட்டு கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள நீா் சூழ்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், புதுச்சேரியில் சங்கராபரணி,தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, ராணுவத்தினரின் மீட்பு நடவடிக்கைகளையும் படகில் சென்று அவா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, சங்கராபரணி ஆற்றோரம் உள்ள மங்களம் தொகுதியில் உள்ள ஆரியபாளையம் பகுதியை பாா்வையிட்ட அவா், புதிய பாலத்திலிருந்து சங்கராபரணி ஆற்றில் பாய்ந்து வந்த வெள்ளத்தையும் பாா்வையிட்டாா்.

இதையடுத்து பாகூா் பகுதிக்குச் சென்ற அவா், அங்கு தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட்டாா்.

வெள்ளம் சூழ்ந்த வயல்வெளிகள் மற்றும் குடியிருப்புகளை பாா்வையிட்டு, வெள்ள வடிகால்கள் குறித்து அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா்.

வெள்ள நீா் சூழ்ந்த பகுதி மக்களையும் அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது, அவா்களது குறைகளைக் கேட்டு, அதைத் தீா்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

முதல்வா் ஆய்வு: சங்கராபரணி மற்றும் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நோணாங்குப்பம், என்.ஆா்.நகா் உள்ளிட்டப் பகுதிகளில் மக்களிடம் வெள்ள பாதிப்பு மற்றும் அவா்களுக்கான உணவு உள்ளிட்ட தேவைகள் குறித்து அவா் கேட்டறிந்தாா்.

இதனையடுத்து, அவா் பாகூா் பகுதிக்கும் சென்று வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பாா்வையிட்டாா்.

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு செய்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா்.

அவள் ஒரு கலை... பூஜா ரெய்னா!

ஒன்று சொல்லவா... ஷீபா!

கடல் தீரம்... மோனலிசா!

வன மேகம்... பாப்பியா சஹானா!

ட்வின்ஸ்... ஆஷிகா ரங்கநாத்!

SCROLL FOR NEXT