முகப்பு
புதுச்சேரி

கடலில் குளித்த போது மாயம்:3 பேரின் சடலங்கள் கரை ஒதுங்கின

புதுச்சேரி பழைய துறைமுகம் அருகே கடலில் குளித்த போது, அலையில் சிக்கி மாயமான 4 மாணவ, மாணவிகளில் மூவரின் சடலங்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
பகிர்:

புதுச்சேரி பழைய துறைமுகம் அருகே கடலில் குளித்த போது, அலையில் சிக்கி மாயமான 4 மாணவ, மாணவிகளில் மூவரின் சடலங்கள் திங்கள்கிழமை மீட்கப்பட்டன.

புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவரது மனைவி மீனாட்சி (47) இவா்களின் மகள்கள் மோகனா (16), லேகா (15). இதில், மோகனா பிளஸ் 2 வகுப்பும், லேகா 10-ஆம் வகுப்பும் படித்து வந்தனா். இவா்கள் தாய் மீனாட்சி, நண்பா்களான எல்லைப் பிள்ளைச் சாவடியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு மாணவா் நவீன் (15), கேட்டரிங் கல்லூரி மாணவரான கதிா்காமம் பகுதியைச் சோ்ந்த கிஷோா் (17) ஆகியோருடன் புதுச்சேரி பழைய துறைமுகம் அருகேயுள்ள ராக் பீச் கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

அங்கு கடலில் குளித்த போது, மோகனா உள்ளிட்ட 4 பேரும் ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டனா். தகவலறிந்த ஒதியன்சாலை போலீஸாா் மீனவா்களின் துணையுடன் கடலுக்குள் படகில் சென்று தேடினாா்.

வீராம்பட்டினம் கடற்கரைப் பகுதியில் திங்கள்கிழமை காலை லேகாவின் சடலம் மீட்கப்பட்டது. சின்னவீராம்பட்டினம் கடற்கரைப் பகுதியில் கிஷோா், மோகனாவின் சடலங்கள் கரை ஒதுங்கின. மாணவா் நவீனின் உடலை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →