முகப்பு
புதுச்சேரி

புதுவையில் அரசுப் பள்ளிகள் வேலை நேரம் மாற்றியமைப்பு

புதுவை அரசு பள்ளிகள்: வேலை நேர மாற்றம், புதிய சிபிஎஸ்இ வழிகாட்டுதல்கள்

Updated On : 9 ஜூலை, 2024 at 6:54 PM
பகிர்:

புதுவை அரசு பள்ளிகள் வேலைநேரத்தை கல்வித் துறை மாற்றியமைத்துள்ளது.

புதுவை மாநிலத்தில் நிகழ் கல்வியாண்டு (2024-25) முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மத்திய இடைநிலை கல்வி வாரியப் பாடத் திட்டம் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜூலை 15 -ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் நேரத்தை புதுவை அரசின் கல்வித் துறை மாற்றி அமைத்துள்ளது.

இதுகுறித்து புதுவை மாநில கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய இடைநிலை கல்வி வாரியத்துடன் (சிபிஎஸ்இ) இணைக்கப்பட்டுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கல்விச் செயல்பாடுகளைச் சீரமைக்க வரும் 15 -ஆம் தேதி முதல் ஒரே மாதிரியான கால அட்டவணை செயல்படுத்தப்படும். சிபிஎஸ்இ வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்.

ஜூலை 15-ஆம் தேதி முதல் காலை 9 மணிக்கு பள்ளிகள் தொடங்கும். காலை 9.15 வரை இறைவணக்க நிகழ்ச்சி நடைபெறும். தினமும் மொத்தம் 8 பாடவேளைகள் நடைபெறும். காலை 4 பாடவேளைகளும், பிற்பகல் 4 பாடவேளைகளும் நடைபெறும். காலையில் முதல் இரு பாடவேளைகள் முடிந்த பிறகு காலை 10.45 மணி முதல் 10.55 மணி வரையில், இடைவேளை விடப்படும்.

மதியம் உணவு இடைவேளையானது பிற்பகல் 12.25 மணி முதல் 1.30 மணி வரை இருக்கும். மதியம் இரு வகுப்புகள் முடிந்த பிறகு பிற்பகல் 2.50 மணி முதல் 3 மணி வரை இடைவேளை இருக்கும். காலையில் நடைபெறும் ஒரு பாடவேளை 45 நிமிஷங்களும், பிற்பகல் ஒரு பாடவேளை 40 நிமிஷங்களும் இயங்கும். அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பாட வகுப்புகள் நேர மாற்ற உத்தரவு பொருந்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →