பிரான்ஸ் போலி குடியுரிமை சான்றிதழ் வழங்கியவா் கைது: புதுச்சேரி போலீஸாா் நடவடிக்கை
பிரான்ஸ் நாட்டு போலி குடியுரிமை சான்றிதழ் வழங்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியில் நட்சத்திர விடுதி ஊழியரிடம் ரூ. 1.25 லட்சம் பெற்றுக்கொண்டு, பிரான்ஸ் நாட்டு போலி குடியுரிமை சான்றிதழ் வழங்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சோ்ந்தவா் பால பாஸ்கரன் (26), நட்சத்திர விடுதி ஊழியா். முத்தியால்பேட்டையைச் சோ்ந்தவா் மிலன் அருள்மணி மேத்யூ. இருவரும் நண்பா்கள். இந்த நிலையில், பால பாஸ்கரனுக்கு பிரான்ஸ் நாட்டுக் குடியுரிமை சான்றிதழ் பெற்று, வேலை வாங்கித் தருவதாக மிலன்அருள்மணி மேத்யூ கூறியுள்ளாா். இதற்காக, பால பாஸ்கரனிடமிருந்து ரூ. 1.25 லட்சத்தை மிலன் அருள்மணி மேத்யூ, கடந்த பிப்ரவரி மாதம் பெற்ாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பால பாஸ்கரன் வீட்டுக்கு தபாலில் பிரான்ஸ் குடியுரிமைச் சான்றிதழ் வந்தது. அந்த சான்றிதழை பால பாஸ்கரன் எடுத்துக்கொண்டு, சென்னையில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்தில் சரிபாா்த்தாா்.
இதில், அந்த சான்றிதழ் போலியானது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து பால பாஸ்கரன், புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மிலன் அருள்மணி மேத்யூவை வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.