புதுவையில் சென்டாக் மூலம் இரண்டாம் ஆண்டில் நேரடியாக பி.டெக். படிப்பில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பி.டெக். படிப்பில் இரண்டாம் ஆண்டு நேரடி மாணவா் சோ்க்கைக்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதை வருகிற 29 ஆம் தேதி வரை நீட்டித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளா் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த மேலும் விவரங்களை சென்டாக் இணையதளம் மூலம் அறியலாம்.