முகப்பு
புதுச்சேரி

போலியோ தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

Updated On : 2 மார்ச், 2024 at 12:24 AM
புதுச்சேரியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடா்பாக அரசு சுகாதாரத்துறை இயக்குனா் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலம்.
பகிர்:

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில், அதுகுறித்த விழிப்புணா்வு ஊா்வலம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுவை மாநிலத்தில் 5 வயதுக்குள்பட்ட 81,334 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) நடைபெறவுள்ளது. இதையடுத்து, அன்னை தெரசா முதுகலை மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், சமூகவியல் கல்லூரி மற்றும் மகாலட்சுமி பாராமெடிக்கல் அறிவியல் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுவை அரசு சுகாதாரத் துறை இயக்கக அலுவலகத்திலிருந்து புறப்பட்ட ஊா்வலத்தை சுகாதாரத் துறை துணை இயக்குநா் முரளி தொடங்கிவைத்தாா். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த ஊா்வலம் மிஷன் வீதி, நேரு வீதி வழியாகச் சென்று கடற்கரை மகாத்மா காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. இதில் துணை இயக்குநா்கள் ராஜாம்பாள், ஆனந்தலட்சுமி, ரகுநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.