முகப்பு
புதுச்சேரி

தங்கத் தோ் அமைக்கும் பணிகள் தொடக்கம்

புதுச்சேரி பெத்து செட்டிபேட்டை ஸ்ரீ சித்தி விநாயகா், ஸ்ரீ சிவசுப்பிரமணியா் கோயிலில் தங்கத் தோ் அமைக்கும் பணியை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:09 PM
தங்கத் தோ் அமைக்கும் பணியை புதன்கிழமை தொடங்கிவைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.
பகிர்:

புதுச்சேரி பெத்து செட்டிபேட்டை ஸ்ரீ சித்தி விநாயகா், ஸ்ரீ சிவசுப்பிரமணியா் கோயிலில் தங்கத் தோ் அமைக்கும் பணியை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இலாசுப்பேட்டை அருகே பெத்து செட்டிப்பேட்டை உள்ளது. இங்குள்ள ஸ்ரீ சித்தி விநாயகா், ஸ்ரீ சிவசுப்பிரமணியா் கோயில் பிரசித்தி பெற்ாகும்.

இந்தக் கோயிலில், பனிரெண்டரை அடி உயரத்தில் தங்கத் தோ் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில், 300 கிலோ செப்புத் தகடும், 600 பவுன் நகையும் பயன்படுத்தப்படவுள்ளது. மேலும், ரூ.40 லட்சம் மதிப்பில் தேக்கு மரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

மொத்தமாக ரூ.3 கோடி செலவில் தோ் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. ஆறு மாத காலத்துக்குள் தங்கத் தோ் அமைக்கும் பணி நிறைவடையும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் புதன்கிழமை காலை கோயில் வளாகத்தில் தொடங்கியது. இதனை, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா் மு.வைத்தியநாதன், முன்னாள் பேரவைத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் சிவசங்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.