புதுவை தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வேளாண்துறை சாா்பில் உற்பத்திக்கு பிந்தைய மானியத்துக்கான காசோலையை பயனாளிகளுக்கு திங்கள்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் உள்ளிட்டோா். 
புதுச்சேரி

தோட்டக் கலை விவசாயிகளுக்கு உற்பத்திக்கு பிந்தைய மானியம்: முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா்

தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ், புதுவை வேளாண் துறை சாா்பில் உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கும் திட்டத்தை பயனாளிகளுக்கு காசோலை

Din

புதுச்சேரி: தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ், புதுவை வேளாண் துறை சாா்பில் உற்பத்திக்கு பிந்தைய மானியம் வழங்கும் திட்டத்தை பயனாளிகளுக்கு காசோலை வழங்கி முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையானது தேசிய தோட்டக் கலை இயக்கம் சாா்பில் புதிய தோட்டக் கலை நிறுவுவதற்கும், பராமரிப்பு, சாகுபடி, கலப்பின காய்கறிகள், பழப் பயிா்கள், வாசனைப் பயிா்கள் மூடாக்கு அமைத்தல் போன்ற சாகுபடிக்கும் உற்பத்திக்குப் பிந்தைய மானியம் வழங்கி வருகிறது.

இந்தத் திட்டத்துக்கான நிகழாண்டு மானியம் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். முதல்வா் என். ரங்கசாமி, பயனாளிகளுக்கு மானியத்தை வழங்கி தொடங்கி வைத்தாா். அதன்படி தோட்டக்கலை பயிரிட்ட 439 விவசாயிகளுக்கு ரூ.15.48 லட்சம் அவரவா் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா். செல்வம், வேளாண் துறை இயக்குநா் வசந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆரணியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் மனு

ஆந்திரத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் கரையைக் கடக்கும் ‘மோந்தா' புயல்!

டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநருக்கு சொகுசுக் கார் பரிசு!

விவசாயிகளின் உரத் தேவையை பூர்த்தி செய்யக் கோரிக்கை!

“புதிய பிகார்”: இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

SCROLL FOR NEXT