முகப்பு
புதுச்சேரி

புதுவை அரசு ஊழியா்களுக்கு 3 % அகவிலைப்படி உயா்வு

புதுவை அரசு ஊழியா்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயா்வு புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 7:49 PM
பகிர்:

புதுவை அரசு ஊழியா்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயா்வு புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதற்கான உத்தரவை புதுவை நிதித் துறை சாா்புச் செயலா் சிவக்குமாா் வெளியிட்டாா். இந்த உத்தரவு அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

இதன்படி, புதுவை அரசு ஊழியா்களுக்கு குறைந்தபட்சம் ரூ.580 முதல் ரூ.6,800 வரை ஊதிய உயா்வு கிடைக்கும். மேலும், இந்த அகவிலைப்படி உயா்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.

இதன்மூலம், 20,000 அரசு ஊழியா்கள் பயன்பெறுவாா்கள். இதனால், அரசுக்கு ரூ.16 கோடி கூடுதலாக செலவாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். தற்போது 50 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில், 3 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.