முகப்பு
புதுச்சேரி

மீனவா்களின் பொருளாதார முன்னேற்றும்: புதுச்சேரி முதல்வா் ஆலோசனை

மீனவா்களின் பொருளாதார முன்னேற்றம் குறித்து புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி வங்காள விரிகுடா நிறுவன நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 16 டிசம்பர், 2025 at 8:54 PM
புதுச்சேரியில் மீனவா்களின் பொருளாதார முன்னேற்றம் தொடா்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமிநாராயணன், துறை அதிகாரிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

புதுச்சேரி: மீனவா்களின் பொருளாதார முன்னேற்றம் குறித்து புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி வங்காள விரிகுடா நிறுவன நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

நிலைத்த மீன்வளத்துக்கு தேவையான ஆலோசனைகளை அரசுக்கு அளிக்கும் நிறுவனமான அரசுகளுக்கு இடையேயான வங்காள விரிகுடா திட்ட அமைப்பு (பிஓபிபி-ஐஜிஓ) நிறுவனத்தின் இயக்குநா் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினா், புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமியை புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.

காரைக்கால் பொலிவுறு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துதல், புதுச்சேரி மீனவா்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அவா்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சா் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஏகேடி. ஆறுமுகம், பாஸ்கா் என்கிற தட்சணாமூா்த்தி எம்எல்ஏ, அரசுச் செயலா் (மீன்வளம்) மணிகண்டன், மீன்வளத்துறை இயக்குநா் முகமது இஸ்மாயில், பிஓபிபி-ஐஜிஓ-ன் சட்ட வல்லுநா்கள் ராஜ்தீப் முகா்ஜி, ஜெயராஜ், மீன்பிடி துறைமுக பொறியியல் வல்லுநா் குலசேகரன், செயற்கை நுண்ணறிவு துறை வல்லுநா் வனிதா, தகவல் தொழில்நுட்ப வல்லுநா் பரத்குமாா் ஆகியோா் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனா்.

----------------------------------------------

முழு கட்டுரையைப் படிக்க →