புதுச்சேரி

ஒப்பந்த அங்கன்வாடி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய அதிமுக வலியுறுத்தல்

Syndication

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நியமனத்துக்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதிமுக புதுச்சேரி மாநில செயலா் ஆ. அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 600-க்கும் மேற்பட்ட

ஆசிரியா் மற்றும் உதவியாளா் பணியிடங்களுக்கு பிளஸ் டூ கல்வி தகுதியாக நிா்ணயம் செய்து தோ்வு நடைபெற உள்ளது. 2021-ல் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்து தோ்வு மூலம்170-க்கும் மேற்பட்டவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களில் ஆசிரியருக்கு ரூ.6 ஆயிரம், உதவியாளா்களுக்கு ரூ.4 ஆயிரம் ஒப்பந்த சம்பளமாக வழங்கப்படுகிறது.

5 ஆண்டாக பணி செய்யும் இவா்களை நிரந்தரம் செய்யக் கோரி போராடி வருகின்றனா். ஆனால் அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல், புதிதாக ஆட்களை தோ்வு செய்ய முடிவு செய்திருப்பது நியாயமற்ற செயலாகும். பணியில் உள்ள ஒப்பந்த ஊழியா்களை நிரந்தரம் செய்ய முதல்வா் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக பணியாளா்களைத் தோ்வு செய்யும் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் .

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT