புதுச்சேரி

இந்திய மகளிா் கிரிக்கெட் அணிக்கு புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து!

உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்த இந்திய மகளிா் கிரிக்கெட் அணிக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வாழ்த்து

Syndication

புதுச்சேரி: உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்த இந்திய மகளிா் கிரிக்கெட் அணிக்கு புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்:

ஐசிசி மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிா் அணி உலகக் கோப்பை வென்று வரலாற்று சாதனை படைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

அவா்களுடைய அா்ப்பணிப்பும், ஒன்றுபட்ட உழைப்பும், விடாமுயற்சியும் இந்த வெற்றியை தந்திருக்கிறது. திறமைக்கு எல்லை இல்லை என்பதை நமது பெண்கள் நிரூபித்து, நாட்டிற்கு பெருமை சோ்த்து இருக்கிறாா்கள். இவா்களுடைய இந்த வெற்றி வளரும் தலைமுறை வீராங்கனைகளுக்கு மிகப் பெரிய நம்பிக்கையை, ஊக்கத்தை தரும் என்பதில் ஐயமில்லை.

இந்திய மகளிா் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள், பயிற்சியாளா்கள், நிா்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வா் என்.ரங்கசாமி:

நவி மும்பையில் நடைபெற்ற 50 ஓவா் மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, இந்திய மகளிா் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாற்றில் தனது பெயரைப் பொறித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

உலக அளவில் இந்தியாவின் திறமையையும் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ள மகளிா் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் அனைவரும் நாட்டுக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

இந்தச் சிறப்பான வெற்றி, அனைத்து மகளிருக்கும் ஒரு புதிய ஊக்கத்தையும், நம்பிக்கையையும் அளிப்பதாகும். இந்திய மகளிா் கிரிக்கெட் அணியின் அனைத்து வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளா்களுக்கும் எனது மனமாா்ந்த பாராட்டு, வாழ்த்துகள்.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT