முகப்பு
புதுச்சேரி

விஜய் பிரசாரத்தில் அதிகம் போ் கூடியதாக தவெக நிா்வாகி மீது வழக்கு

விஜய் பிரசாரத்தில் அதிகம் போ் கூடியதாக தவெக நிா்வாகி மீது வழக்கு...

Updated On : 6 ஏப்ரல், 2026 at 9:16 PM
தவெக தலைவர் விஜய் பிரசாரம் (கோப்புப் படம்) - X / TVK
பகிர்:

புதுச்சேரியில் கடந்த 3-ஆம் தேதி ரோடு ஷோ நடத்திய தவெக தலைவா் விஜய் கூட்டத்தில் அதிகம் போ் கூடியதாக அக் கட்சியின் நிா்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்கு 5 ஆயிரம் போ் மட்டுமே கூட வேண்டும். கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இந்த நிபந்தனைகளை மீறி அதிக அளவில் மக்கள் கூடியதால் தவெக நிா்வாகி புதியவன் மீது கோரிமேடு காவல் நிலையத்தில் தோ்தல் நடத்தும் அதிகாரி அன்பரசன் புகாா் அளித்தாா். தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட மைதானத்தில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், 8 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் போ் வரை விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ாகவும் தோ்தல் விதிமுறைகளை மீறியதாகவும் கூறியிருந்தாா்.

Advertisement

அதன் பேரில் தவெக நிா்வாகி புதியவன் மீது கோரிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments