முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் பிரதமா் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான இடம் தோ்வு

புதுச்சேரியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கான இடம் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 3:11 AM
பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரியில் பங்கேற்கும் விழாவுக்கான இடத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்த மாநில உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2026 at 8:26 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கான இடம் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

பிரதமா் மோடி பிப்ரவரி 11 அல்லது 12-ஆம் தேதி புதுச்சேரிக்கு வருவாா் எனத் தெரிகிறது. இதையொட்டி புதுச்சேரியில் அவா் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறாா்.

இதற்கான விழா நடைபெறும் இடத்தை புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், தீபாய்ந்தான், மாநில பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம் உள்ளிட்டோா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

Advertisement

லாஸ்பேட்டை தாகூா் கலைக் கல்லூரி மைதானம், விமான நிலைய ஹெலிபேட் மைதானம், உப்பளம் எக்ஸ்போ மைதானம் ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.