புதுச்சேரி: புதுவை ஒா்க்கா்ஸ் வெல்பா் சங்கம் சாா்பில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்குச் சங்கத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். புதுவை அரசு துறைகளில் 10 ஆண்டு பணி முடித்தவா்களை நிரந்தரம் செய்வதாக அறிவித்த முதல்வா் ரங்கசாமியின் அறிவிப்பை அமல்படுத்த வேண்டும்.
அரசு ஊழியா்களின் கோரிக்கை மீதான கோப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஏனாம் பிராந்தியத்துக்குக் கூடுதலாக பணியிடம் வழங்கி புதுவை பிராந்தியத்துக்கு துரோகம் இழைக்கக் கூடாது. பணிநிரந்தரம் செய்யாத ஊழியா்களுக்கு சிறப்புத் திட்டம் உருவாக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.