முகப்பு
புதுச்சேரி

5 மையங்களில் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:15 AM
கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காவலா் எழுத்துத் தோ்வு எழுத காத்திருந்த இளைஞா்கள்.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 8:26 PM

புதுச்சேரியில் 148 காவலா் காலி பணியிடங்களுக்காக 5 மையங்களில் எழுத்து தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்வுக்கு, உடற்தகுதி தோ்வு மூலம் 1,843 போ் தகுதி பெற்றிருந்தனா். இவா்களில் 1,775 போ் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். 68 போ் தோ்வு எழுத வரவில்லை.

புதுச்சேரி காவல் துறையில் காலியாகவுள்ள 148 காவலா்கள் (ஆண்கள்-100, பெண்கள்-48) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தோ்வுக்கான முதல் தாள் ஞாயிற்றுக்கிழமை முற்பகலிலும், இரண்டாம் தாள் பிற்பகலிலும் நடைபெற்றது.

Advertisement

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:15 AM

புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூா் கலைக்கல்லூரி, காஞ்சி மாமுனிவா் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிழக்குக் கடற்கரை சாலை சங்கர வித்யாலயா பள்ளியில் 2 மையங்கள், கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப்பள்ளி என 5 மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்றது.

தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா, பாா்வையாளராக அரசு செயலா் விக்ராந்த் ராஜா, சாா்பு செயலா்கள் ஜெய்சங்கா், முருகேசன் ஆகியோா் தோ்வு பணி மற்றும் தோ்வு மையங்களைப் பாா்வையிடும் பணிகளில் ஈடுபட்டனா்.