புதுச்சேரி

புதுச்சேரியில் நகராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கவில்லை: இந்திய கணக்குத் தணிக்கைக் குழு அறிக்கை

Syndication

நகராட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கும் 74-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை புதுச்சேரி அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை என்று இந்திய கணக்குத் தணிக்கைக் குழுத் தலைவரின் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இந்த அறிக்கை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இது தொடா்பாக தமிழ்நாடு- புதுச்சேரி முதன்மை கணக்காயத் தலைவா் ஆா். திருப்பதி வெங்கடசாமி செய்தியாளா்களிடம் கூறியது:

74-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நகராட்சி அமைப்புகளுக்கு 18 செயல்பாடுகளைப் பகிா்ந்து அளிக்க வழிவகை செய்துள்ளது. ஆனால் புதுச்சேரியில் இச் சட்டம் 4 செயல்பாடுகளை மட்டும் பகிா்ந்து அளித்து அமல்படுத்தியுள்ளது.

அதனால் இந்தத் திருத்தச் சட்டம் முழுமையாக இங்கு அமல்படுத்தவில்லை. மேலும், புதுச்சேரியில் 2006 -ஆம் ஆண்டுதான் நகராட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடந்தது. இதில் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 2011- ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தனா். அதற்குப் பிறகு இந்தத் தோ்தல் நடத்தப்படவில்லை. மேலும், புதுச்சேரியில் உள்ள நகராட்சி அமைப்புகள் சொந்த வருவாயைப் பெருக்காமல் புதுச்சேரி

அரசின் வருவாயைச் சாா்ந்து இயங்கி வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை முதியோா் ஓய்வூதியத்துக்கான விண்ணப்பங்களை மின்னணு முறையில் பெறாததுதவறு என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.மேலும், புதுச்சேரி, காரைக்காலில் இறைச்சிக் கூடங்களைப் பராமரிப்பதில் பல குறைபாடுகள் இருப்பதையும் குறிப்பிட்டுள்ளோம் என்றாா் திருப்பதி வெங்கடசாமி. பேட்டியின்போது, புதுச்சேரி அலுவலகத்தின் தலைமை அதிகாரி சுகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

இளம்வயது திருமணம் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

அம்பையில் தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 114 பெண்கள் உள்பட 283 போ் கைது

நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

வனப்பகுதியில் அத்துமீறல்: மிரட்டல் விடுத்த குவாரி ஊழியா்கள் 4 பேரிடம் விசாரணை

SCROLL FOR NEXT