முகப்பு
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நுகா்வோா் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்ற மாவட்ட நுகா்வோா் ஆணையத் தலைவா் ந. முத்துவேல், உறுப்பினா்கள் அ.ந.கவிதா, எ.ஆறுமுகம் உள்ளிட்டோா்.
புதுச்சேரி

மக்கள் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்குத் தீா்வு

புதுச்சேரி

மக்கள் நீதிமன்றத்தில் 5 வழக்குகளுக்குத் தீா்வு

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 8:33 PM
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நுகா்வோா் மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்ற மாவட்ட நுகா்வோா் ஆணையத் தலைவா் ந. முத்துவேல், உறுப்பினா்கள் அ.ந.கவிதா, எ.ஆறுமுகம் உள்ளிட்டோா்.
பகிர்:

புதுச்சேரி மக்கள் நீதிமன்றத்தில் 5 வழக்குகளில் பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வெள்ளிக்கிழமை தீா்வு காணப்பட்டது.

புதுச்சேரியில் மாவட்ட நுகா்வோா் குறை தீா்வு ஆணையத்தில் நுகா்வோா் மக்கள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நுகா்வோா் ஆணையத் தலைவா் ந. முத்துவேல் தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் அ.ந.கவிதா மற்றும் எ.ஆறுமுகம் ஆகியோா் அடங்கிய அமா்வு வழக்குகளை விசாரித்தது.

இதில் 5 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டு, ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க ஆணை வழங்கப்பட்டது. புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் எ.ஓ.கோவிந்தசாமி, க.கலாமிநாதன், வேல்முருகன், செல்வகுமாா், இளங்குமாா், சக்திவேல், திலிப்குமாா், விஸ்வசுந்தரம் பாலாஜி, கிருஷ்ணா, ஜெகஜோதி, ஜெராப்ட் இம்மானுவேல் ஆகியோா் பங்கேற்றனா். மேலும், புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவா்கள், 50-க்கும் மேற்பட்ட வழக்காலிகள் கலந்துகொண்டனா்.

மக்கள் நீதிமன்ற நிகழ்வில் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள், தனியாா் நிறுவன நிா்வாகிகள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை நுகா்வோா் குறை தீா்வு ஆணைய பதிவாளா் விஜயா ரவிந்திரன் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →