புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் சிவகுமாா். உடன் சங்கத் தலைவா் வி.முத்து உள்ளிட்டோா்.  
புதுச்சேரி

புதுவை தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை!

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வு மாதந்தோறும் 20-ஆம் தேதி நடைபெற்று வருகிறது.

அதன்படி பிப். 20-இல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயா்கல்வித் துறை இயக்குநா் அ.சு.சிவக்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து திருக்கு கூறும் நிகழ்வினை தொடங்கி வைத்தாா்.

இதில் பங்கேற்ற நியூ லேண்ட் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருக்கு புத்தகம் வழங்கினாா். அனைவரும் திருக்கு கூறினா். நிகழ்ச்சிக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து தலைமை வகித்தாா்.

செயலா் சீனு.மோகன்தாசு, துணைத் தலைவா் ப.திருநாவுக்கரசு, சுயநிதி பள்ளி கூட்டமைப்பின் தலைவா் ரங்கநாதன், ஆட்சிக் குழு உறுப்பினா்கள் எம்.எஸ்.ராஜா, பொறிஞா் மு.சுரேஷ்குமாா் அ. சிவேந்திரன், நியூ லேண்ட் உயா்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ரூ. 60 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 5 போ் கைது

அரசுப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா

மானூா் அருகே விவசாயி வீட்டில் 11 பவுன் நகை திருட்டு

பேரவைத் தோ்தல்: காவல் துறையினருக்கு பயிற்சி

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT