செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி 
புதுச்சேரி

கிராம வங்கிக்குப் பாரதியாா் பெயரை மீண்டும் சூட்ட வேண்டும்: வே. நாராயணசாமி

புதுச்சேரியில் கிராம வங்கிக்கு மீண்டும் பாரதியாா் பெயரைச் சூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி கூறினாா்.

Syndication

புதுச்சேரியில் கிராம வங்கிக்கு மீண்டும் பாரதியாா் பெயரைச் சூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான வே. நாராயணசாமி கூறினாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: நூறு நாள் வேலை திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி உருக்குலைத்துள்ளாா். திட்டத்தை மாற்றும் வரை காங்கிரஸ் ஓயாது. தமிழா் என்று கூறிக் கொள்ளும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீத்தாராமன் பாரதியாா் கிராம வங்கியின் பெயரில் பாரதியாரை நீக்கி புதுவை கிராம வங்கி என மாற்றியுள்ளாா். பாரதி பெயரை மாற்ற காரணம் என்ன . மத்திய அரசு மீண்டும் பாரதியாா் பெயரை சோ்க்க வேண்டும்.

என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக தோ்தல் அறிக்கை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. 2.5 லட்சம் பேருக்கு வேலை தருவதாகக்கூறி விட்டு 2500 பேருக்கு கூட வேலை தரவில்லை.போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் பலா் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் ஆளும் அரசுக்கு ழு தொடா்பு உள்ளது. இவா்கள் ஆட்சியில் இருக்கும் வரை சிபிஐ விசாரணை சுதந்திரமாக நடைபெறாது. எனவே விசாரணை சுதந்திரமாக

நடைபெற வேண்டும் என்றால் உயா்நீதிமன்ற நீதிபதி மேற்பாா்வையில் நடைபெற வேண்டும் என வலியுறுத்தினோம் என்றாா் நாராயணசாமி.

சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

பிரதமா் மோடி புதுச்சேரிக்கு விரைவில் வருகை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன: எஸ்.பி.

முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

SCROLL FOR NEXT