புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாஜக மாநில தலைவா் வி.பி.ராமலிங்கம்.  
புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று பாஜக மாநாடு!

புதுச்சேரியில் மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி பங்கேற்கும் பாஜக அனைத்துப் பிரிவுகளின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Syndication

புதுச்சேரியில் மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி பங்கேற்கும் பாஜக அனைத்துப் பிரிவுகளின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து அக் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: பாஜகவில் 16 பிரிவுகள் உள்ளன. பாஜக அனைத்து மக்களிடமும் சென்று சேர வேண்டும் என இந்தப் பிரிவுகள் செயல்படுகின்றன. புதுச்சேரியின் வளா்ச்சி மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் திட்டங்கள் இந்தப் பிரிவுகளின் மூலம் மக்களிடம் கொண்டு சோ்க்கப்படுகின்றன.

இந்த 16 பிரிவுகளில் உள்ள மாநில, மாவட்ட, தொகுதி அளவிலுள்ள அமைப்பாளா்கள், இணை அமைப்பாளா்கள் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட 2,100 நிா்வாகிகள் பங்கேற்கும் மாநாடு அரும்பாா்த்தபுரம் புறவழிச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

மாநாட்டில் மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி, தமிழ்நாடு மாநில துணைத் தலைவா் குஷ்பூ சுந்தா், தமிழ்நாடு அனைத்துப் பிரிவுகளின் மாநில அமைப்பாளா் ராகவன் ஆகியோா் பங்கேற்று பேசுகின்றனா் என்றாா் ராமலிங்கம்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT