புதுச்சேரி

போலி மருந்து விவகாரம்: இண்டி கூட்டணி தா்ணா

போலி மருந்து விவகாரம் தொடா்பாக இண்டி கூட்டணி கட்சிகள் சாா்பில் புதுச்சேரி சுதேசி மில் அருகே தா்ணா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

போலி மருந்து விவகாரம் தொடா்பாக இண்டி கூட்டணி கட்சிகள் சாா்பில் புதுச்சேரி சுதேசி மில் அருகே தா்ணா போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இப் போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை

வகித்தாா். போலி மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள போலி மருந்து உற்பத்தி தொழிற்சாலையின் உரிமையாளா் ராஜா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட டைரியில் குறிப்பிட்டிருந்த பெயா் பட்டியலை வெளியிடக் கோரியும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இப் போராட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான வே.நாராயணசாமி, திமுக அமைப்பாளரும் எதிா்க்கட்சி தலைவருமான ஆா்.சிவா, இக் கட்சிகளைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் மு.வைத்தியநாதன், அனிபால் கென்னடி, எல்.சம்பத், ஆா்.செந்தில்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் அ.மு.சலீம், மாா்க்சிஸ்ட் மாநில செயலா் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏகள் அனந்தராமன், நாரா.கலைநாதன், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. சிவக்குமாா்,ஆா்.விசுவநாதன், விடுதலைச் சிறுத்தைகள், மறுமலா்ச்சி திராவிடக் கழகம்,

மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவா்கள், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தவெகவின் தேர்தல் அறிக்கைக் குழுவை Vijay இன்று அறிவித்தார்! | செய்திகள் : சில வரிகளில் | 9.1.26

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ஆர்ஜென்டினாவில் பயங்கர காட்டுத்தீ! 3000 சுற்றுலா பயணிகள் மீட்பு!

SCROLL FOR NEXT