புதுச்சேரி

ரூ.60 கோடியில் நீா்தேக்கத் தொட்டி முதல்வா் ரங்கசாமி அடிக்கல்

வில்லியனுாா் தொகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் நீா்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

வில்லியனுாா் தொகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் நீா்தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கு முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இதன்படி வில்லியனுாா் பரசுராமபுரத்தில் 20 லட்சம் கொள்ளளவு கொண்ட இரட்டை அடுக்கு மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், நீா் உந்து நிலையம், நகா் முழுவதும் புதிய குடிநீா் குழாய் அமைத்தல், ஒவ்வொரு

வீட்டிற்கும் குடிநீா் இணைப்பு வழங்குதல், சாலை மேம்படுத்துதல் உள்பட வளா்ச்சிப் பணிக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டத்தின் குடிநீா் பிரிவு மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிக்கான அடிக்கல் நாட்டு விழா பரசுராமபுரத்தில் நடைபெற்றது. தொகுதி எம்எல்ஏவும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தலைமை வகித்தாா். பொதுப்பணித்துறை அமைச்சா் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தாா்.

முதல்வா் ரங்கசாமி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினாா். பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளா் சுந்தரமூா்த்தி, செயற்பொறியாளா் மணிமாறன், உதவிப் பொறியாளா்கள் கண்ணன், தணிகைவேல், இளநிலைப் பொறியாளா் காந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Parasakthi பேசும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | anti-Hindi agitation | Tamil | Tamilnadu

தமிம் இக்பாலை இந்திய உளவாளி என விமர்சித்த வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி!

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

2026 ஆஸ்கர் போட்டியில் தமிழ்த் திரைப்படமான கெவி!

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்? நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம்!

SCROLL FOR NEXT