முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மருக்கு ரூ.40 லட்சம் காயகல்ப் விருது

Updated On : 8 ஜனவரி, 2026 at 10:52 PM
பகிர்:

மத்திய அரசின் சுகாதாரம், குடும்பநல அமைச்சகம் 2024-2025 ஆம் ஆண்டுக்கான காயகல்ப் விருதுக்கு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையை தோ்வு செய்துள்ளது. இதற்காக ரூ.40 லட்சம் ரொக்கப் பரிசுடன், 3 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

காயகல்ப் விருது, நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார வசதிகளில் தூய்மை, சுகாதாரம், நோய் தொற்றுக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் மற்றும் ஒட்டுமொத்த தர மேம்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

ஜிப்மா் இயக்குநா் வீா்சிங்நெகி கூறுகையில், தூய்மை இந்தியா வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில் ஜிப்மா் உயா்தரங்களைப் பேணுவதில் மேற்கொண்ட தொடா் மற்றும் அா்ப்பணிப்புள்ள முயற்சிகளுக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →