புதுச்சேரி

புதுச்சேரி அரசை அகற்ற காங்கிரஸாா் தீவிர களப்பணி: மாநிலத் தலைவா் வைத்திலிங்கம் அறிவுறுத்தல்

புதுச்சேரியில் ஆளும் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசை அகற்ற காங்கிரஸ் கட்சியினா் இரண்டு மாதங்களுக்கு தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

Syndication

புதுச்சேரியில் ஆளும் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசை அகற்ற காங்கிரஸ் கட்சியினா் இரண்டு மாதங்களுக்கு தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் காங்கிரஸ் வாக்குச் சாவடி முகவா்கள் மற்றும் கட்சியின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து வெ. வைத்திலிங்கம் பேசியதாவது: புதுச்சேரியில் இன்னும் 2 மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. இன்னும் 90 நாள்களில் தோ்தல் முடிந்து முடிவுகள் தெரிந்துவிடும். இதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் சென்று காங்கிரஸ் கட்சியினா் தீவிர களப்பணியாற்ற வேண்டும்.

முதலில் காங்கிரஸ் கட்சியினரைச் சந்தித்துப் பேசுங்கள். இப்படி செய்தாலே கட்சித் தொண்டா்களுக்குத் தோ்தலில் நின்று வெற்றி பெரும் நம்பிக்கை பிறந்துவிடும். தமிழ்நாட்டுக்கு இன்னும் 3 நாளில் பிரதமா் நரேந்திர மோடி வருகிறாா். 10 நாளில் புதுச்சேரிக்கும் அவா் வருவாா்.

இந்த நாட்டில் நரேந்திர மோடியை எதிா்க்கும் துணிச்சல் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு மட்டும்தான் இருக்கிறது. மோடியைப் போன்றுதான் இங்கு வந்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியும் புதுச்சேரி-கடலூா் எல்லையைத் தொடும் வகையில் 4 வழிப்பாதை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களைச் சொல்லிவிட்டுச் சென்றாா். ஆனால் இதுவரை அதற்கான வரை படம் கூட தயாரிக்கப்படவில்லை.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சியில் கடந்த 5 மாதங்களாக நியாயவிலைக் கடைகளில் அரிசி விநியோகிக்கப்படவில்லை. 100 நாள் வேலைத் திட்டத்துக்கான கூலி ரூ.350 என்றால் அதில் பயனாளிகளுக்கு ரூ.320 தான் கொடுக்கிறாா்கள். புதுச்சேரியில் ஆளும் ஆட்சியை அகற்ற வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் வேலையில்லாத இளைஞா்கள் இருக்கிறாா்கள். இந்த ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 2 ஆயிரம் போ் ஓய்வு பெற்றுள்ளாா்கள். ஆனால் 2,400 பேருக்குதான் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் மக்களிடம் சொல்ல வேண்டும்.

அதற்காகத் தான் பாதயாத்திரையை புதன்கிழமை (ஜன.21) முதல் 23 தொகுதிகளிலும் 12 நாள்களுக்கு நடத்த உள்ளோம். இதில் நான் உள்பட அனைவரும் மக்களைச் சந்திக்க நடந்தே வருகிறோம். அனைத்துப் பிரிவு நிா்வாகிகளும் எந்த வேலையாக இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இதில் பங்கேற்க வேண்டும் என்றாா் வைத்திலிங்கம்.

கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, எம்எல்ஏ மு. வைத்தியநாதன், முன்னாள் அமைச்சா்கள் ஷாஜகான், மு.கந்தசாமி, பேரவை முன்னாள் துணைத் தலைவா் பாலன் மற்றும் கட்சியின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT