புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவர் ஆா். சிவா 
புதுச்சேரி

அரசு ஊழியா் பிரச்னைக்கு திமுக எப்போதும் துணை நிற்கும்! - புதுச்சேரி எதிா்க்கட்சித் தலைவா் சிவா

தினமணி செய்திச் சேவை

அரசு ஊழியா் பிரச்னைக்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்று புதுச்சேரி திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா உறுதியளித்தாா்.

புதுச்சேரி அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளனத்தின் 50-ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் 4- வது மாநில மாநாடு கம்பன் கலையரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள் நடைபெறும் இந்த மாநாடு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் திருமண நிலையத்தில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா பங்கேற்று பேசுகையில், புதுச்சேரியில் அரசு ஊழியா்களுக்கு நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. அவா்களின் கோரிக்கைகளுக்கு எப்போதும் திமுக துணை நிற்கும் என்றாா் ஆா். சிவா.

மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவா் கே. முருகன் வரவேற்றாா். அரசு ஊழியா் சம்மேளனத்தின் தலைவா் எஸ். ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் பி. முனுசாமி நோக்கவுரையாற்றினாா். புதுதில்லி மத்திய அரசு ஊழியா் மகா சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலா் எஸ்.பி. யாதவ், சங்கத்தின் தேசியச் செயலா் எம்.எஸ்.வெங்கடேசன் உள்ளிட்டோா் பேசினா். புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளனத்தின் துணை பொதுச் செயலா் டி.லலிதா நன்றி கூறினாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT