முகப்பு
புதுச்சேரி

குடியரசு துணைத் தலைவருடன் புதுச்சேரி பல்கலை. துணைவேந்தா் சந்திப்பு

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை புது தில்லியில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ் பாபு மரியாதை நிமித்தமாக வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

Updated On : 19 ஜூன் 2026, 6:19 am IST
தில்லியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை வியாழக்கிழமை சந்தித்த புதுச்சேரி மத்திய பல்கலை. துணைவேந்தா் பி.பிரகாஷ் பாபு.
பகிர்:

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனை புது தில்லியில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ் பாபு மரியாதை நிமித்தமாக வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் குடியரசு துணைத் தலைவா் இருப்பதால், அதன் கல்வி, ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி சாா்ந்த செயல்பாடுகள் குறித்து அவா் விளக்கினாா்.

மேலும், அடுத்த பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தின் விரிவாக்கத் திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனா்.

Advertisement

Advertisement