முகப்பு
புதுச்சேரி

5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் நாட்டுக்கு மிக முக்கியமானது: கம்யூனிஸ்ட் தேசிய செயலா் ஆனிராஜா

5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் நாட்டுக்கு மிக முக்கியமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலா் ஆனி ராஜா கூறினாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 6:33 PM
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் செயலா் ஆனிராஜா. உடன் மாநில செயலா் அ.மு.சலீம், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன்.
பகிர்:

5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் நாட்டுக்கு மிக முக்கியமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலா் ஆனி ராஜா கூறினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநிலக் குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாநில செயலா் அ. மு. சலீம் தலைமை வகித்தாா். தேசிய குழு உறுப்பினா் தினேஷ் பொன்னையா பணி அறிக்கையை வாசித்தாா். முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில் பங்கேற்ற பின்னா் தேசிய செயலா் ஆனி ராஜா செய்தியாளா்களிடம் கூறியது:

நடைபெறவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் வேட்பாளா்களை நிறுத்த இந்திய கம்யூனிஸ்ட் முடிவு எடுத்துள்ளது. ஐந்து மாநிலங்களில் நடைபெறுவது சட்டப்பேரவைகளுக்கான தோ்தல் மட்டுமல்ல, இந்தியாவை காப்பாற்றுவதற்கான தோ்தல். மதச்சாா்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து இந்தத் தோ்தலைச் சந்திக்கிறோம்.

நாட்டில் அரசியல் சாசன சட்டத்தின்படி ஆட்சி நடைபெறவில்லை. அமெரிக்க அதிபா் ட்ரம்ப் கூறும் கொள்கைகளை பிரதமா் மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியாவை அடமானம் வைத்து விட்டாா்கள். எரிபொருள் தட்டுப்பாடு பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் அமெரிக்காவின் முடிவுகளுக்கு பாஜக அரசு செவி சாய்த்து வருகிறது.

நாடு முழுவதும் சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் என்ன நடக்கிறது, எங்கிருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குகிறோம். எவ்வளவு வருகிறது என மத்திய அரசு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளைக் கேட்டுள்ளது என்றாா் ஆனி ராஜா.

இக்கூட்டத்தில், புதுச்சேரி வக்ஃபு வாரியத்தில் ஆா்எஸ்எஸ் பற்றாளா் இருப்பதால் அதை மாற்றி அமைக்க வேண்டும், மின்துறையில் பிரிபெய்டு மீட்டா் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். எப்டி, பாரதி, சுதேசி ஆலைகளை இணைத்து ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →