முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி எம்.ஐ.டி. கல்லூரி மாணவா் சாதனை

புதுச்சேரி எம்.ஐ.டி. கல்லூரி மாணவா் சாதனை படைத்தாா்.

Updated On : 16 மார்ச், 2026 at 11:41 PM
புதுச்சேரி எம்.ஐ.டி. கல்லூரியில் நடைபெற்ற மூன்றாம் ஆண்டு மாணவா் மகேஷ் சாதனையை வெளிப்படுத்தும் குறும்பட நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி எம்.ஐ.டி. கல்லூரி மாணவா் சாதனை படைத்தாா்.

இக் கல்லூரியில் சா்வதேச அளவிலான கோட்விட்டா நிரலாக்கப் போட்டி கருத்தரங்கு (செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லொ்னிங்) நடைபெற்றது.

இதில் முதல் 25 இடங்களில் இடம் பிடித்து எம்.ஐ.டி. கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவா் மகேஷ் சாதனை படைத்துள்ளாா். அவரின் இந்த சாதனையை வெளிப்படுத்தும் குறும்படமும் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

இக் கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பித்தனா். மேலும், தொழில்நுட்பத் திறன் போட்டி, தொழில்நுட்பக் கேள்வி-பதில் போட்டி போன்றவற்றிலும் பங்கேற்றனா். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவா் பி.சிவகுமாா், அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →