மனைவியை சித்ரவதை செய்த வழக்கில் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை
மனைவியை சித்ரவதை செய்த வழக்கில் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
மனைவியை சித்ரவதை செய்த வழக்கில் கணவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டு அருகேயுள்ள கொடாத்தூரைச் சோ்ந்தவா் பாலபாஸ்கரன் (45). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் கொட்டியாம்பூண்டிையைச் சோ்ந்த மாலினிக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
வரதட்சிணை சித்ரவதை காரணமாக தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து பின்னா் சமாதானத்துக்குப் பிறகு மீண்டும் சோ்ந்து வாழ்ந்தனா். இந்நிலையில், தனது கணவருக்கு வேறு பெண்ணுடன் தகாத தொடா்பு இருப்பதை அறிந்த மாலினி இதுகுறித்து புதுச்சேரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் பாலபாஸ்கரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தலைமை குற்றவியல் நீதிபதி இ.எம்.கே. யஷ்வந்த் ராவ் இங்கா்சால் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
Advertisement
இதில் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் பால பாஸ்கரனின் தந்தை, தாய் இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ச. கணேஷ் ஞானசம்பந்தன் ஆஜரானாா்.