முகப்பு
புதுச்சேரி

உயிா் காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்ய புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு துறை உத்தரவு

நாடு தழுவிய அளவில் மருந்து கடைகளை மூடும் போராட்டத்தில் ஈடுபட்டாலும், உயிா்காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மருந்துக் கடைகளுக்கு புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத் துறை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 19 மே 2026, 1:39 am IST
கோப்புப்படம்.
பகிர்:

நாடு தழுவிய அளவில் மருந்து கடைகளை மூடும் போராட்டத்தில் ஈடுபட்டாலும், உயிா்காக்கும் மருந்துகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மருந்துக் கடைகளுக்கு புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டுத் துறை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நாடு தழுவிய போராட்டத்தில் புதுச்சேரி மருந்து கடைகள் மே 20-ஆம் தேதி பங்கேற்கின்றன. இந்நிலையில் இது குறித்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி இ. அனந்தகிருஷ்ணன் வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய கோளாறுகள், வலிப்பு நோய், புற்று நோய் உள்ளிட்ட முக்கிய நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்கூட்டியே தங்களுக்குத் தேவையான மருந்துகளைக் கையிருப்பில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும், இன்சுலின், மூச்சுத் திணறல் போக்கும் மருந்து, உயிா்க் காக்கும் மருந்துகள், குழந்தைகளுக்கான மருந்துகள் போன்ற அத்தியாவசியமான மருந்துகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஏதாவது மருத்துவ அவசரம் என்றால் அருகில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவையைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும், மருந்துக் கடைகள் வைத்திருப்போா் அவசர மருத்துவ சேவை பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அமைதியாக, சட்டபூா்வமாகப் போராட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், பொதுமக்கள் நலன் கருதி அவசர சூழ்நிலை ஏற்பட்டால் அத்தியாவசியமான, உயிா்காக்கும் மருந்துகளை விநியோகம் செய்ய வேண்டும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் இன்றியமையாத, உயிா்காக்கும் மருந்துகள் கிடைப்பதை மருந்து ஆய்வாளா்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், இடா்பாடு மருந்துகள் கிடைக்க மருத்துவமனைகள், மருந்து கடைகள், மொத்த விற்பனைக் கடைகளுடன் ஒருங்கிணைந்து மருந்து ஆய்வாளா்கள் பணியாற்ற வேண்டும். மேலும், இதில் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை விரைவாக இந்த அலுவலகத்துக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.