முகப்பு
விழுப்புரம்

விலையில்லா சீருடை வழங்கும் விழா

திருநாவலூர் ஒன்றியம் பாண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3-ம் பருவத்திற்கான விலையில்லா சீருடை, புத்தகம் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

 திருநாவலூர் ஒன்றியம் பாண்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3-ம் பருவத்திற்கான விலையில்லா சீருடை, புத்தகம் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயா சுரேஷ் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் த.சுப்பிரமணியன் வரவேற்றார். உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மா.தண்டபாணி, சு.ராஜவேலு ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதற்கான ஏற்பாடுகளை சூரியகுமார், வேலுமயில், லீலாகுமாரி, சபரிநாதன், ஷர்மிளா, பிரசன்னா, சிவகாமி, சத்யா, குணசெல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

கோவிந்தராஜப்பட்டினம்: திருநாவலூர் ஒன்றியம் கோவிந்தராஜப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் பருவத்திற்கான விலையில்லா சீருடை மற்றும் புத்தகம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் தண்டபாணி தலைமை வகித்தார். கிராம கல்விக்குழு தலைவர் அம்சவள்ளி கொளஞ்சியப்பன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் எஸ்.சக்திவேல் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் சரிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உதவி ஆசிரியர் ஆர்.அசோக்குமார் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →