விழுப்புரம்

அனுமதியின்றி மின்வேலி: எஸ்.பி. எச்சரிக்கை

தினமணி

அனுமதியின்றி மின்வேலி அமைத்து உயிரிழப்புகளை ஏற்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. ஜெயக்குமார் எச்சரித்தார்.
 இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயம் மற்றும் நில உரிமையாளர்கள், வன விலங்குகளால் பயிர்கள் பாழாவதைத் தடுக்க நிலத்தைச் சுற்றி மின்வேலி அமைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது சட்டப்படி குற்றம். இதனால், அவ்வப்போது உயிரிழப்புச் சம்பவங்கள் ஏற்படுகின்றன.
 மின்வேலி அமைக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட துறைகளிடம் முன் அனுமதி பெற்று, நிலத்தைச் சுற்றி சிகப்பு மின் விளக்குகளுடன் கூடிய எச்சரிக்கைப் பலகை பொருத்தி உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும். இதனை செய்யத் தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றவாளிகளை அமலாக்கத் துறை கைது செய்ய உச்ச நீதிமன்றம் நிபந்தனை

தேர்தல் முடிவுக்கு மறுநாள் பாஜக சிதறிவிடும்: உத்தவ் தாக்கரே

5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!

‘வைட்டமின் சி’ ஐஸ்வர்யா கண்ணன்...!

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

SCROLL FOR NEXT