விழுப்புரம்

சுவர் இடிந்து உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் நிவாரணம்: அமைச்சர் வழங்கினார்

DIN

உளுந்தூர்பேட்டை வட்டம், செங்குறிச்சி கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 2 குழந்தைகளின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் நிவாரண உதவியை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கி ஆறுதல் கூறினார்.
செங்குறிச்சி கிராமத்தில் கடந்த 2}ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ், அவரது மனைவி மஞ்சுளா, மகள் விஷ்ணுதரணி (15), மகன்கள் திருமலைவாசன், சுதர்சன் (4) ஆகியோர் மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில் விஷ்ணுதரணி, சுதர்சன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனையறிந்த சட்டம், நீதி மற்றும் சிறைச்சாலைத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செங்குறிச்சி கிராமத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.8 நிவாரண நிதியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ இரா.குமரகுரு, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், உளுந்தூர்பேட்டை ஒன்றியச் செயலர் மணிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT