விழுப்புரம்

உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் தாக்கியதில் மின்சாதனங்கள் சேதம்

தினமணி

உளுந்தூர்பேட்டை அருகே மேப்புலியூரில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் மீது இடியுடன் கூடிய மின்னல் தாக்கியதில் மின் சாதன பொருள்கள் சேதம் அடைந்தன.
 உளுந்தூர்பேட்டை வட்டம், மேப்புலியூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது ஊரில் செவ்வாய்க்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்பொழுது இவர் வீட்டின் மீது பயங்கர இடி சப்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் வீட்டிலிருந்த மின் சாதன பொருள்களான டிவி, டிவிடி, விசிடி, மின் விசிறி 2 உள்பட ரூ.75 ஆயிரம் மதிப்பிலான மின் சாதனங்கள் சேதமடைந்தன.
 இதுகுறித்து தகவலின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்செக்ஸ் 3500 புள்ளிகள் வீழ்ச்சி! பங்குகளை வாங்கிக் குவிக்கும் முதலீட்டாளர்கள்!

பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

கிருஷ்ணாநகர் தொகுதியில் மஹுவா மொய்த்ரா முன்னிலை!

நடிகை ஹேமமாலினி முன்னிலை!

தில்லியில் பாஜக தொடர்ந்து முன்னிலை!

SCROLL FOR NEXT