ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறப்பு
திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டடத்தை, காணொலிக் காட்சி மூலம் முதல்வர் புதன்கிழமை திறந்து வைத்தார்.
விழுப்புரம்ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறப்பு
திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டடத்தை, காணொலிக் காட்சி மூலம் முதல்வர் புதன்கிழமை திறந்து வைத்தார்.
திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டடத்தை, காணொலிக் காட்சி மூலம் முதல்வர் புதன்கிழமை திறந்து வைத்தார்.
திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டையில் 1.30 ஏக்கர் பரப்பளவில் ரூ. 2.30 கோடியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் புதிதாக கட்டப்
பட்டது.
இதையடுத்து, இந்த விற்பனைக் கூடத்தை அதன் செயலர் ராமச்சந்திரன், தனி அலுவலர் தனசேகர், மேலாளர் சரவணன், கண்காணிப்பாளர் தாமோதரன், அலுவலகப் பணியாளர் செந்தில் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் திறந்து வைத்தனர்.
ஒன்றிய அதிமுக செயலர் டி.எஸ்.
பழனிச்சாமி, நகரச் செயலர் என்.தங்கவேல், இளைஞரணிச் செயலர் தங்க.
பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள், வியாபாரிகள், விற்பனைக்கூட பணியாளர்கள், எடைப் பணித் தொழிலாளர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். வேளாண்மை உதவி இயக்குநர் கனகலிங்கம் நன்றி கூறினார்.
இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அலுவலகம், பரிவர்த்தனை கூடம், கிடங்கு மற்றும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.