விழுப்புரம்

விழுப்புரத்தில் நள்ளிரவில் பேருந்துகள் மோதல்: 20 பயணிகள் காயம்

DIN

விழுப்புரம் புறவழிச்சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அரசுப் பேருந்து மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதியதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து சென்னைக்கு அரசுப் பேருந்து ஒன்று வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது.
நள்ளிரவு 12.30 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் அருகே வந்த அந்த பேருந்து விழுப்புரம் நகருக்குள் திரும்ப முயன்றது. அப்போது சென்னையிலிருந்து கேரளமாநிலம் கொச்சியை நோக்கி சென்ற தனியார் சொகுசுப் பேருந்து, இந்த அரசுப் பேருந்தின் மீது மோதியது. இதில் அரசுப் பேருந்தின் நடுப் பகுதியும், தனியார் பேருந்தின் முன் பகுதியும் சேதமடைந்தன. இந்த விபத்தில் இரு பேருந்துகளில் பயணித்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். அவர்களை விழுப்புரம் தாலுகா போலீஸார், நெடுஞ்சாலை போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு, முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT