விழுப்புரம்

கட்டுரைப் போட்டியில் சாதித்த மாணவிக்கு உதவித் தொகை

DIN

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரைப்போட்டியில் முதலிடம் இடம் பெற்ற மாணவிக்கு தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற ஊழியர்கள் , ஆசிரியர்கள் சார்பில் ரூ 10 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது.
செஞ்சி ஒன்றியம் பாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி லியோனி, மாவட்ட அளவில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டுரைப்போட்டியில் முதலிடம் பெற்றார். 
இதற்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருத்துவர் சுப்புராயன் தலைமை வகித்தார். தட்சணாமூர்த்தி, பாலப்பட்டு சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மகாலட்சுமி வரவேற்றார்.
ஆசிரியர்கள் முனுசாமி, அசோக், ஜெய்சங்கர் ஆகியோர் மாணவியை பாராட்டிப் பேசினர். 
பின்னர், மாணவி லியோனிக்கு தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஊழியர்கள் , ஆசிரியர்கள் சார்பில் வைப்பு நிதியாக ரூ 10 ஆயிரத்தை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சக்திவேல் வழங்கினார்.
மேலும், குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அனைத்து மாணவர்களுக்கும் எழுது உபகரணங்கள், இனிப்புகள் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் ஷேக்மூசா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT