விழுப்புரம்

நூலகத்தில் பெண் குழந்தைகள் தின விழா

தினமணி

திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு, நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.கலியபெருமாள், அருட்கவிஞர் அருள்நாதன்.தங்கராசு, நாடொப்பனக்குழு நிர்வாகி கலியபெருமாள், ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர் ஆ.சிவகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார்.
 விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட நூலக அலுவலர் ஆர்.சுப்பிரமணியம், பெண் குழந்தைகளை காப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கி பாராட்டிப் பேசினார்.
 நல்லாசிரியர்கு.நெடுஞ்செழியன், வானவில் கல்வி அறக்கட்டளைத் தலைவர் வே.ஜெயக்குமார், சிறுகதை எழுத்தாளர் ம.விருதுராஜா, தமிழை சுத்தமாகப் பேசுவோர் சங்கத் தலைவர் தகடி முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
 திருக்கோவிலூரைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவி க.பவஸ்ரீ, நூலகப் பயன்பாட்டுக்காக ரூ.1,500 மதிப்புள்ள மின் விசிறியை நன்கொடையாக வழங்கினார்.
 ஏற்பாடுகளை நூலகப் பணியாளர்கள் சு.சம்பத், ச.தேவி,
 இரா.கோகிலா, செ.சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். நூலகர் மு.சாந்தி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT