விழுப்புரம்

விழுப்புரம் புத்தகத் திருவிழா நிறைவு 

தினமணி

விழுப்புரத்தில் கடந்த இரண்டு வாரமாக நடைபெற்று வந்த புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதேபோல வரும் ஆண்டுகளிலும் புத்தகத் திருவிழா நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
 சென்னையைச் சேர்ந்த இல்லம் தோறும் நூலக இயக்கம் மற்றும் விழுப்புரம் முல்லைப் புத்தக அங்காடி ஆகியவை இணைந்து விழுப்புரம், கே. கே. சாலையில் புத்தகத் திருவிழாவை நடத்தின. கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தேதி தொடங்கிய இந்த புத்தகத் திருவிழாவில் 25 ஆயிரம் தலைப்புகளின் கீழ் சுமார் 25 லட்சம் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
 இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. மொத்தம், ரூ.2 லட்சம் மதிப்பிலான 10 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையானது.
 இதுகுறித்து இல்லம் தோறும் நூலக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், ராஜாராம் ஆகியோர் கூறியதாவது: விழுப்புரத்தில் நடத்திய புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர். விழுப்புரத்தில் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஏப்ரல் மாதத்தில் புத்தகத் திருவிழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
 ஒத்துழைப்பு கிடைத்தால் மாவட்ட நிர்வாகத்துடனும், பள்ளிக் கல்வித் துறையுடனும் இணைந்து நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து, பொதுமக்களிடம் புத்தக ஆர்வத்தை துண்டுவோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT