முகப்பு
விழுப்புரம்

பால் காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

விழுப்புரம் வீரவாழியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி, கைலாசநாதர் கோயிலுக்கு பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பால் காவடி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

விழுப்புரம் வீரவாழியம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி, கைலாசநாதர் கோயிலுக்கு பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பால் காவடி எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.
விழுப்புரம் நேருஜி சாலையில் உள்ள வீரவாழியம்மன் கோயிலில் 54-ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா கடந்த சனிக்கிழமை கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகத்துடன் தொடங்கியது.
சித்ரா பௌர்ணமியான ஞாயிற்றுக்கிழமை காலை வீரவாழியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் 108 பால் காவடியுடன், கைலாசநாதர் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர் . பின்னர், அங்குள்ள சிவசண்முக முருகனுக்கு பால் 
அபிஷேகம், ஆராதனை செய்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.      திங்கள்கிழமை 1008 சங்காபிஷேகமும், செவ்வாய்க்கிழமை இடும்பன் பூஜையும் நடைபெற உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →