விழுப்புரம்

நலவாழ்வு வலைகளம் வெளியீட்டு விழா

DIN

இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் நலவாழ்வுக்கான வலைகளம் வெளியீட்டு விழா கல்லூரியில் உள்ள காமராசர் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுணன் தலைமை வகித்தார். உடல் நல இயக்குநரும் ஆர்.கே.எஸ் கல்விக் குழுமத்தின் தலைவருமான க.மகுடமுடி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக குமுதம் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் பி.வரதராஜன் பங்கேற்றார்.
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் ஹெஸ்ஸி வலைகளத்தைச் செல்லிடப்பேசி மூலம் வெளியிட, அதை குமுதம் குழுத்தின் நிர்வாகத் தலைவர் பி.வரதராஜன் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து பி.வரதராஜன் பேசியதாவது: இந்த வலைகளத்தின் பயன் எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும். மருத்துவ உலகில் மாபெரும் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்றார்.
ஹீலியின் குளோபல் இயக்குநர் யூனூஸ் வலைகளப் பயன்பாடு குறித்து ஸ்கோப் மூலம் விளக்கினார். வலைகளத் திட்ட இயக்குநர் அமீன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.காமராஜ் உள்ளிட்ட பலர் வலைகளத்தின் வளர்ச்சி குறித்து பேசினர்.
தொடர்ந்து, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பேசியதாவது: இன்றைக்கு உடல் நலம் பேணுதலே முக்கியம். அதற்கு இந்த வலைகளம் உதவும். வளர்ந்துள்ள இன்றைய அறிவியல் வளர்ச்சியின் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், உடல் நலம் பற்றிய அறிவைப் பெற வசதி செய்வதே ஹெஸ்ஸியின் முக்கிய பயனாகும்.
அன்றாட அறிவைப் பெறவும், தனது நலனைத் தானே பேணவும், தங்கள் குடும்ப நலனைப் பாதுகாக்கவும் ஹெஸ்ஸி உதவும். மருத்துவர்கள் ஆய்வாளர்கள் தமது உரைகள் மற்றும் எழுத்துகள் மூலம் மக்களை ஊக்கப்படுத்தவும், சாதனைகளை வளர்த்துக் கொள்ளவும், ஒருவருடன் ஒருவர் கலந்தாய்வு செய்யவும் ஹெஸ்ஸி உதவும்.
இது மக்கள் சமுதாயத்துக்கு மிகவும் பயன் தரும் அமைப்பாகும் என்றார் அவர்.
விழாவில் கல்லூரி முன்னாள் கல்வி இயக்குநர் அ.மதிவாணன், கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ச.நேரு, கல்லூரி முதல்வர் கு.மோகனசுந்தர், துணை முதல்வரும், இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவருமான ஜி.எஸ்.குமார், கல்லூரித் துணைத் தலைவர் தே.மணிவண்ணன் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நலவாழ்வு வலைகளத்தின் ஆலோசகரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இயக்குநருமான இ.முருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

SCROLL FOR NEXT