தொரவி கைலாசநாதர் கோயிலில் திருவாசகம் முற்றோதல்
விக்கிரவாண்டி அருகேயுள்ள தொரவி பெரியநாயகி அம்பாள் உடனாய கைலாசநாதர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
விக்கிரவாண்டி அருகேயுள்ள தொரவி பெரியநாயகி அம்பாள் உடனாய கைலாசநாதர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
பழமையான இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கோயிலில் ஞானப் பெருவேள்வி விழா நடைபெற்றது. இதில், மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.
சிவனடியார் கலியமூர்த்தி தலைமையிலான குழுவினர் பங்கேற்று, திருவாசகத்தை மனமுருகிப் பாடினர். விழாவில், புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஒவ்வொரு மாதமும் 2-ஆவது ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்ச்சி நடைபெறும் என கோயில் பணியாளர் சரவணன் தெரிவித்தார்.