முகப்பு
விழுப்புரம்

இலக்கிய அமைப்பு ஆய்வரங்கம்

விழுப்புரத்தில் சங்க இலக்கிய பொதும்பர் இலக்கிய அமைப்பு ஆய்வரங்கம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 9 ஜூலை, 2018 at 9:31 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

விழுப்புரத்தில் சங்க இலக்கிய பொதும்பர் இலக்கிய அமைப்பு ஆய்வரங்கம் அண்மையில் நடைபெற்றது.
 வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆய்வரங்கத்துக்கு கருத்தாளர் மா.சற்குணம் தலைமை வகித்தார். தலைவர் தமிழரசு வரவேற்றார். தியாகி அறக்கட்டளை நிறுவனர் விஜயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். மருதம் அறக்கட்டளை நிறுவனர் ரவி கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். முனைவர் தமிழரசி, புலவர்கள் சூரியநாராயணன், விசயன் தனியுரை வழங்கினர்.
 இதில், அமைப்பின் சார்பில் நடைபெற்ற சங்க இலக்கியப் போட்டித் தேர்வில் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 திண்டிவனம், செஞ்சொல் கேள்விச் செல்வர் மன்ற நிறுவனர் புலவர் பால.பழனி, திருவருட்பா ஆ.பாலகிருஷ்ணன் பிள்ளை நினைவு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் தமிழ்வேங்கை ஆகியோருக்கு அகரம் சித்தாமூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலகணேசன் பாராட்டுப் பட்டயம் வழங்கினார். தொடர்ந்து, பட்டம் பெற்றவர்கள் ஏற்புரையாற்றினர்.
 புதுச்சேரி புதுவைப் பண்பாட்டுக் கழகச் சமுதாயக் கல்லூரி துணைப் பேராசிரியர் லட்சுமிதத்தை கலந்து கொண்டு, சங்க இலக்கியத்தில் தாய் என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.
 நிகழ்ச்சியை முனைவர் நாகராஜன் தொகுத்து வழங்கினார். அமைப்பின் செயலாளர் கவிஞர் விக்கிரமன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.