முகப்பு
விழுப்புரம்

ரயில்வே மேம்பாலப் பணியை விரைவுபடுத்த நுகர்வோர் சங்கம் கோரிக்கை

விழுப்புரம் காட்பாடி வழி ரயில்வே மேம்பாலப் பணியை விரைவுபடுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:58 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

விழுப்புரம் காட்பாடி வழி ரயில்வே மேம்பாலப் பணியை விரைவுபடுத்தி, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 இந்த சங்கத்தின் மாநில பொதுக் குழுக் கூட்டம், விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்றது. நிர்வாகி பக்கிரி தலைமை வகித்தார். நிர்வாகிகள் அண்ணாமலை, தட்சிணாமூர்த்தி, மதியழகன், கமலக்கண்ணன், ஞானசம்பந்தம், கனகராஜ், தணிகாசலம், சேட்டு, குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப் பொதுச் செயலாளர் காமராஜ் வரவேற்றார்.
 மாநிலத் தலைவர் ஆரோக்கியசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கௌரி, சின்னபொண்ணு நேசம், சகாயம், தமிழரசி, சௌரியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 விழுப்புரத்தில் மந்தகதியில் நடைபெற்று வரும் காட்பாடி வழி ரயில்வே மேம்பாலப் பணியை விரைவாக முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்படும் அரசியல் கட்சியைச் சார்ந்தோர், கட்சிகளிலிருந்து விலகி அனைவருக்கும் பொது என்ற நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.