முகப்பு
விழுப்புரம்

திருக்கோவிலூர் வட்ட ஜமாபந்தி நிறைவு

திருக்கோவிலூர் வட்டத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாய (ஜமாபந்தி) நிறைவு நாள் முகாமில், 228 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

திருக்கோவிலூர் வட்டத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாய (ஜமாபந்தி) நிறைவு நாள் முகாமில், 228 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 
திருக்கோவிலூர் வட்டத்துக்கு உள்பட்ட நிகழாண்டுக்கான வருவாய்த் தீர்வாய முகாம், திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மே 23-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன் நிறைவு நாள் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
ஜமாபந்தி அலுவலரும், சார்-ஆட்சியருமான சாருஸ்ரீ தலைமை வகித்து, 79 பேருக்கு பட்டா மாற்ற உத்தரவுகளையும், 36 பேருக்கு முதியோர் ஓய்வூதியம், 103 பேருக்கு குடும்ப அட்டைகள் உள்பட 228 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
மீதமுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, நிவர்த்தி செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முகாமில், இந்தாண்டு வருவாய்த் தீர்வாயக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டதோடு, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வருவாய் கணக்குகள் மேற்கொள்வது குறித்த பயிற்சியும், அவர்களது குறைகளும் கேட்டறிந்து, தீர்க்கப்பட்டன. 
இதில், வட்டாட்சியர் பி.செல்வராஜ், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் இளவரசன், வட்ட வழங்கல் அலுவலர் சத்தியநாராயணன், துணை வட்டாட்சியர்கள் பசுபதி, செந்தில்குமார், லல்லிராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →