விழுப்புரம்

3,395 எரிசாராயம் அழிப்பு

DIN

விழுப்புரம் பகுதியில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 3,395 லிட்டர் எரிசாராயத்தை நீதிமன்ற அனுமதியுடன் போலீஸார் புதன்கிழமை அழித்தனர்.
 விழுப்புரம் மது விலக்கு போலீஸார் விழுப்புரம் பகுதியில் அண்மையில் இரு வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 97 கேன்களில் இருந்த 3,395 லிட்டர் எரிசாராயத்தை அழிக்க நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றனர்.
 இதையடுத்து, புதன்கிழமை விழுப்புரம் அருகேயுள்ள பிடாகம் தென் பெண்ணை ஆற்றங்கரையோரம் அந்த சாராயக் கேன்களை வாகனத்தில் கொண்டு சென்றனர்.
 அங்கு விழுப்புரம் மது விலக்கு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி கேன்களில் இருந்த எரிசாராயத்தை கீழே ஊற்றி போலீஸார் அழித்தனர்.
 அழிக்கப்பட்ட எரி சாராயத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் எனக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT