விழுப்புரம்

பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்...

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
இது குறித்து,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  விழுப்புரம் மாவட்டத்தில்,  தீபாவளிப் பண்டிகையையொட்டி 
தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு 2008-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்ட விதிகளின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.  விருப்பமுடையோர்,  உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை வருகிற 28.09.2018-ஆம் தேதிக்கு முன்னதாக,  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 
 தற்காலிக உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் படிவம் 5-ல் பூர்த்தி செய்த விண்ணப்பம் 4 பிரதிகள், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் அசல் வரை
படங்கள் 4 பிரதிகள்,  கடை வைக்கப்படும் இடத்தின் ஆவணப் பத்திரம் நகல் 4 பிரதிகள்,  உரிமக் கட்டணம் ரூ.500-ஐ உரிய அரசு கணக்கில் செலுத்தி,  அதற்கான அசல் செலுத்து சீட்டு ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT