விழுப்புரம்

அரசு மருத்துவமனையில் காவலாளியை தாக்கியதாக 3 இளைஞர்கள் கைது

DIN

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் காவலாளியை தாக்கியதாக 3 இளைஞர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 
சங்கராபுரம் வட்டம், லா.கூடலூரை அடுத்த சேரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கலைச்செல்விக்கு கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அதனை பார்ப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த கலியன் மகன் ஏழுமலை (22), முத்து மகன் அரசன் (23), ராமர் மகன் செல்வம் (19) ஆகிய மூவரும் செவ்வாய்க்கிழமை மாலை வந்தனர்.
அங்கு காவலாளியாக இருந்த கள்ளக்குறிச்சியை அடுத்த பரிகம் கிராமத்தைச் சேர்ந்த சிவசக்தி, பார்வையாளர் நேரம் முடிந்து விட்டது எனக் கூறி தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மூவரும் சிவசக்தியை திட்டியதுடன், மகப்பேறு பிரிவில் பரிசோதனை செய்து கொண்டிருந்த மருத்துவர் மதுமிதாவை பணி செய்ய விடாமல் தடுத்து  கொலை மிரட்டல் விடுத்தனராம். இது குறித்த புகாரின் பேரில் மூவரையும் கள்ளக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT