விழுப்புரம்

செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோயிலில் ஆடிப் பூர விழா

DIN

செஞ்சி வட்டம், செல்லபிராட்டி லலிதா  செல்வாம்பிகை அம்மன் கோயிலில் ஆடிப் பூர விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் லலிதா செல்வாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, 18 ஆயிரம் வளையல்களை கொண்டும், பல்வேறு மலர்களைக் கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது. காலை 11 மணிக்கு சகஸ்கர நாம அர்ச்சனை, மாலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, ஸ்ரீசக்ர தீபாராதனை, புஷ்பாஞ்சலி ஆகியவை நடைபெற்றன. இரவு 9.30 மணிக்கு அம்மனுக்கு மகா ஜோதி தரிசனம் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கன்னியப்பன் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT